வெறுமையை உணர்த்தும் வீடு
Subscribe to Oneindia Tamil
- மயூரா அகிலன்
பவுடரைக் கொட்டி
தரையில் தேய்த்து
மை எடுத்து
சுவற்றில் கிறுக்க
ஆளில்லை…
போட்டி போட்டு
தொலைக்காட்சி பார்க்க
யாருமில்லை…
மடித்து வைத்த
துணிகளை கலைக்கவும்
எவருமில்லை…
ஆங்காங்கே வைத்த பொருள்
அதனதன் இடத்தில்
அப்படியே இருக்க…
விடுமுறைக்கு
ஊருக்கு சென்றுள்ள
பிள்ளைகளின் அருமை
பிரிவில் தானே
தெரிகிறது…
வெறுமையை உணர்த்தும்
வெறும் வீட்டில்….
இருவர் மட்டும்
எதிரெதிரே அமர்ந்து
எத்தனை நாளைக்கு பேசுவது ?












Click it and Unblock the Notifications