26ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாய் ஈமான் அமைப்பு புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சியினை வரும் 26-ம் தேதி இரவு தராவீஹ் தொழுகைக்குப் பிறகு தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் நடத்தவிருக்கிறது.
துபாய் ஈமான் அமைப்பு புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சியினை ஹிஜ்ரி 1432 ரமலான் பிறை 27 ( 26.08.2011 ) வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தராவீஹ் தொழுகைக்குப் பின் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடத்த இருப்பதாக பொதுச்செயலாளர் குற்றாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்தார்.
இந்ந நிகழ்ச்சியில் முஹிப்புல் உலமா கீழை ஏ. முஹம்மது மஃரூப் சிறப்புரை ஆற்றுகிறார்.
தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள அமீரக சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சிறப்பு அழைப்பாளர் மௌலவி அல்ஹாபிழ் வி.பி. முஹம்மது இஸ்ஹாக் ஆலிம் பிலாலி எம்.ஏ. அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
சொற்பொழிவுக்குப் பின் வழக்கம் போல் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து இப்புனித இரவின் நற்பயனை அடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு 050 58 53 888 / 055 4145064 / 050 51 96 433 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications