ஷார்ஜாவில் நகரத்தார் கூட்டமைப்பின் 133-வது கலந்துரையாடல் கூட்டம்
இந்த நிகழச்சி காலை 10.30 மணிக்கு துவங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக பெண்களுக்கான மெஹந்தி போட்டி நடைபெற்றது. இறை வணக்கத்தை செல்வி.ஐஸ்வர்யா முத்துமாணிக்கம் வழங்கினார். திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சியை செல்வன்.கார்த்திக் செல்ல கணபதி வழங்கினார்.
வீர.அழகப்பன் அவர்கள் தலைவர் உரையாற்றினார். "தமிழ் புத்தாண்டு" மற்றும் "முனைவருக்கு ஓர் முகமன்" என்ற கவிதைகளை கவிஞர். நா.தியாகராசன் வாசித்தார். சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்.லெட்சுமணன் அவர்கள் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த முக்கிய விருந்தினர் முனைவர்.பழ. சபாரத்தினம்(பதிவாளர், ஓய்வு, அண்ணாமலை பல்கலைக்கழகம்) அவர்களை வரவேற்று அறிமுகம் செய்தார்.
நிறுவன உறுப்பினர் இராம.நாகப்பன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். பழ.சபாரத்தினம் "நகரத்தார் பெருமைகளைப்" பற்றியும், “என் கண்ணில் கண்ணதாசன்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். செல்வி.காவேரி அருணாச்சலம் பரதநாட்டியம் ஆடினார்.
பின்னர் செல்வி. சுபஸ்ரீ மற்றும் அனுஸ்ரீ மணிகண்டன் ஆகியோரின் உலக வெப்பமாகுதல் பற்றி மிக அருமையான விளக்கப் படங்கள் அளித்தனர். செல்வன்.ஜெய் சுந்தர், செல்வி.அபர்ணா ரமேஷ், செல்வி.மீனாள், செல்வி அலமேலு ஆகியோரின் சிறுவர் நிகழ்ச்சியில், சந்தையில் புதிதாக வந்திருக்கும் விளம்பரம் மக்களுக்கு புரியாமல் இருப்பதை நகைச்சுவையாக நடித்துக் காட்டினார்கள்.
மாலையில் குழந்தைகளுக்கான “நம்மை நாம் அறிவோம்" என்ற வினாடி-வினா நிகழ்ச்சியை மெ.மணிகண்டன் வடிவமைத்து ராஜேஸ்வரி சரவணன், கோமதி நடராஜன், மங்கை, திருமதி.ரெங்கநாயகி ஆகியோர் நடத்தினார்கள். இந்நிகழ்ச்சிகள் குழந்தைகளிடையே நம் நகரத்தார் மரபுகளையும், பழக்க வழக்கங்களையும், பாரம்பரிய உணவுகளையும் பற்றிய விளக்கப் படங்களுடன் எடுத்துக்காட்டாக அமைந்தன. இக்கலந்துரையாடலில் 12 திருமணம் மற்றும் 2 கல்விக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டன. திருமண நிதியுதவிக்கு ரூ.5,000/- மற்றும் கல்வி நிதியுதவிக்கு ரூ.2,000/- இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியிலிருந்து வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மெஹந்தி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் மெ.மணிகண்டன் தம்பதியருக்கு "சோனி ஹோம் தியேட்டர் சிஸ்டம்" பரிசாக வழங்கப்பட்டது. புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள். முனைவர்.பழ.சபாரத்தினம் அவர்களுக்கு பொன்னாடை போத்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. சங்கத்தின் செயலாளர் மு.சுவாமிநாதன் அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் முடிந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications