துபாயில் நடந்த 'நேற்று, இன்று, நாளை' இசை நிகழ்ச்சி: சங்கர் கணேஷ், தேவா, ஸ்ரீகாந்த் தேவா பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

Rhythm events' Netru, Indru, Naalai held in Dubai
துபாய்: இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், தேவா, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் கலந்து கொண்ட நேற்று..இன்று..நாளை இசை நிகழ்ச்சி கடந்த 16ம் தேதி துபாயில் உள்ள இந்தியன் ஹை ஸ்கூலின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற்றது.

ரிதம் இவென்ட்ஸ் துபாய் நடத்திய நேற்று..இன்று..நாளை இசை நிகழ்ச்சி கடந்த 16ம் தேதி துபாயில் உள்ள இந்தியன் ஹை ஸ்கூலின் ஷேக் ராஷித் அரங்கில் மாலை 7 மணி முதல் நடந்தது. இதில் தமிழகத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான சங்கர் கணேஷ், தேவா, ஸ்ரீகாந்த் தேவா, மற்றும் பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் கலந்து கொண்டனர். துபாயைச் சேர்ந்த ஸ்ருதி மியூசிக்கல்ஸ் ஆர்கெஸ்டிரா சிறப்பாக செயல்பட்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களான துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் சையது எம். ஸலாஹுத்தீன் மற்றும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சம்பத் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த மாபெரும் இசை இரவில் நிவேதிதா ஆனந்தன் தலைமையிலான குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிதம் இவென்ட்ஸின் திருமதி சந்திரா ரவி மற்றும் திரு சபேசன் ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு துபாய் சிவ்ஸ்டார் பவன் அணுசரனை வழங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+