சாகித்ய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு வைகோ, சீமான் பாராட்டு
மதுரை: 'காவல்கோட்டம்' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவி்த்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த கவிஞர் சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம்' என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. இந்த நாவல் கூடல் நகரான மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்று பின்னணியை கொண்டு, எழுதப்பட்டதாகும்.
இந்த நாவல் மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்றை அழகிய சொற்கலோடு, வாழ்வியலோடு சித்தரிக்கிறது. வரலாற்றை பின்னணியை சித்தரிக்கும் வித்தியாசமான நாவலாக இது அமைந்துள்ளது.
விருது பெற்ற சு.வெங்கடேசன் (41) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆவார். இவருக்கு கமலா என்ற மனைவியும், யாழினி, தமிழினி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர் ஓட்டை இல்லாத புல்லாங்குழல் (1989), திசையெல்லாம் சூரியன்(1990), பாசி வெளிச்சத்தில்(1997), ஆதிபுதிர்(1998) ஆகிய கவிதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். மேலும் கலாசாரத்தின் அரசியல்(2001), ஆட்சி தமிழ் ஒரு வரலாற்று பார்வை (2003), கருப்பு கேட்கிறான் கெடா எங்கே? (2004), மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (2002), சமயம் கடந்த தமிழ் (2006) ஆகிய ஆய்வு நூல்கள் கட்டுரைத்தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
சிறு வயதில் இந்த உயரிய விருதை பெற்ற சு.வெங்கடேசனுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications