சட்டசபை தேர்தல்-3835 வாக்குபதிவு இயந்திரங்கள் நெல்லை வருகை
நெல்லை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்டம் வாரியாக அனுப்பும் பணியும், சரிபார்க்கும் பணியும் தொடங்கியுள்ளது. நெல்லையில் பெங்களூரூ பெல் நிறுவன பொறியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளில் 2 ஆயிரத்து 351 வாக்குச் சாவடிகள் உள்ளன.
வாக்கு பதிவிற்காக உத்தர பிரதேசத்தில் இருந்து 3835 வாக்குப்பதிவு இயந்திரங்கள் நெல்லை வந்துள்ளன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நெல்லை ராமையன்பட்டியில் உள்ள விற்பனை கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்குபதிவு இயந்திரங்களை பரிசோதித்து தயார் படுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இதற்காக பெங்களூருவைச் சேர்ந்த பாரத் மிகுமின் நிறுவன பொறியாளர்கள் 6 பேர் நெல்லை வந்துள்ளனர். இவர்கள் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் இயந்திரங்களை பரிசோதித்து வருகின்றனர். இந்த பணிகளை ஆந்திராவின் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலரும், தமிழக அரசின் தேர்தல் பார்வையாளருமான தட்சிணாமூர்த்தி, நெல்லை கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications