பிரதமரின் ‘ஷ்ரம் 2010’ விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் தேர்வு

Subscribe to Oneindia Tamil

மதுரை: பிரதமரின் கௌரவ விருதான 'ஷ்ரம் 2010" விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து புது டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலக வட்டாரத்தில் கூறப்படுவதாவது,

தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. பிரதமரின் கௌரவ விருதான 'ஷ்ரம் 2010" விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருத்திற்காக திருச்சிராப்பள்ளி ஷ்ரம் பாரத் மிகுமின் நிலையத்தைச் சேர்ந்த எஸ்.கருப்பையா, ஆர்.ஜெகதீசன், ஏ.வீரப்பன் மற்றும் எஸ். ராஜா ஆகியோர் ஷ்ரம் பூஷன் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுடன் ரூ.1 லட்சமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.

2010-ம் ஆண்டுக்கான ஷ்ரம் பூஷன் விருதுக்காக நாடு முழுவதிலும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சேலம் உருக்காலையைச் சேர்ந்த எஸ்.ஏழுமலை மற்றும் கே.மகாதேவன் ஆகியோருக்கு ஷ்ரம் வீர் விருது வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு தலா ரூ. 60 ஆயிரமும், பாராட்டுப்பத்திரமும் வழங்கப்படும். இந்த விருதுக்காக 38 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இராணிப்பேட்டை பாரத் மிகுமின் நிலையத்தைச் சேர்ந்த ஏ.காமராஜ் ஷ்ரம் ஸ்ரீ விருதுக்குத் தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ. 40 ஆயிரமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். இவ்விருதுக்காக 26 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+