துபாயில் அரபி திக்ரு தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் ராத்திபத்து ஜலாலிய்யா என்ற திக்ரு தொகுப்பு நூல் வெளியீடு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 11-ம் தேதி மாலை கராமா பஹீமிய்யா மஜ்லிஸில் நடைபெற்றது.
இந்த நிகழச்சியின் துவக்கமாக மௌலவி செய்யது அஹமது இறைவசனங்களை ஓதினார். இதற்கு காயல் நூஹு சாஹிப் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் ராத்திபத்து ஜலாலிய்யா ஓதுவதின் சிறப்புகளை விவரித்தார். அதனைத் தொடர்ந்து மலேசியா ஹஸனி குழுமத்தின் ஆதரவுடன் ராத்திபத்து ஜலாலிய்யா என்ற திக்ரு தொகுப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கே.எம். அப்துல் காதர், நூஹு, மௌலவி ரஹ்மத்துல்லாஹ், சௌக்கத் அலி, ஹாபிஸ் உவைஸ், ஷாஜஹான், அஹமது ஜலாலுதீன், இஸ்ஹாக் லெப்பை, ஃபைஸல், ஜாவித், முஹம்மது அன்சாரி, சலாஹுத்தீன், சலீம், ஜுபைர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications