குற்றாலம் ஐந்தருவியில் படகு சவாரி நாளை தொடக்கம்
குற்றாலம்: குற்றாலத்தில் ஐந்தருவி படகு குழாமில் தண்ணீ்ர் நிறைந்ததை அடுத்து நாளை முதல் படகு சவாரி தொடங்குகிறது.
குற்றாலத்தில் ஒரு வாரகாலமாக நல்ல சீசன் உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகள் தவிர பொழுதுபோக்காக படகு குழாம் உள்ளது.
ஐந்தருவி அருகில் உள்ள சுற்றுலா துறைக்கு சொந்தமான படகு குழாமில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தண்ணீர் நிரம்பியதை அடுத்து நாளை முதல் படகு சவாரி துவங்குகிறது.
இதற்காக மொத்தம் 33 படகுகள் தயார் நிலையில் உள்ளது. இவற்றில் இரண்டு இருக்கை படகுகள் 12ம், நான்கு இருக்கை படகுகள் 12ம், நான்கு இருக்கை துடுப்பு படகுகள் 5ம், தனிநபர் படகுகள் 4க்கும் உள்ளன. இவற்றிக்கு கட்டணமாக 2 இருக்கை படகுகளுக்கு அரை மணி நேரத்திற்கு ரூ.75ம், நான்கு இருக்கை படகுக்கு ரூ.100ம், நான்கு இருக்கை துடுப்பு படகுகளுக்கு ரூ.120ம், தனிநபர் படகுகளுக்கு ரூ.50ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9.30 மணிக்கு துவக்க விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை சுற்றுலா துறை மண்டல மேலாளர் சங்கர் , குற்றாலம் தமிழ்நாடு ஹோட்டல் மேலாளர் கருப்பசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications