பாடகி சுதா ரகுநாதனுக்கு அண்ணாமலை செட்டியார் நினைவு பரிசு

சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில், ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் 131வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் நீதிபதி துரைசாமி ராஜூ விழாவிற்கு தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலை கழக இணைவேந்தர் ராமசாமி வரவேற்றார்.
விழாவில், கம்பன் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ராஜா அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்தையா, செயலர் ஏ.ஆர்.ராமசாமி, முன்னாள் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதனுக்கு, அண்ணாமலை செட்டியார் நினைவு பரிசு மற்றும் 1 லட்சம் ரூபாய் காசோலையை, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி துரைசாமி ராஜூ வழங்கினார்.
அதன்பின் விழாவில் நீதிபதி துரைசாமி பேசியதாவது, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் இசை உலகத்தின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர். தற்போது அவரது குடும்பத்தாரும் அதே பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட அண்ணாமலையாரின் புகழ், இந்த பல்கலைக் கழகத்தில் இசையாக கலந்திருக்கும். அதை மறைவதில்லை. அங்கு படிக்கும் மாணவ, மாணவர்களின் வாழ்க்கையில் அது உயிரோட்டமாக கலந்திருப்பதை காணலாம், என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications