துபாயில் நடந்த வானலை வளர்தமிழின் கவியரங்கம்

விழாவின் சிறப்பு விருந்தினராக இடியே ஸ்டார் நிறுவனத்தின் வியாபார அபிவிருத்தி பொது மேலாளர் கோவை பாலாஜி பார்த்த சாரதி அவர்களும் மற்றும் மஸ்கட் தமிழ்ச்சங்க கலை இலக்கியச் செயலாளர் பஷீர் அஹமது அவர்களும் கலந்து கொண்டனர்.
நர்கீஸ் ஜியா மற்றும் ஜெயா பழனி ஆகியோரின் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, அமைப்பின் இணைச் செயலாளர் கீழை ராஸா வரவேற்புரை ஆற்றினார். கவிஞர்கள் ஜியாவுதீன் மற்றும் தஞ்சாவூரான் ஆகியோர் கவியரங்கிற்கு தலைமை வகித்தனர்.
நிவேதிதா ஆனந்தன், நீரோடை மலிக்கா, நர்கீஸ் ஜியா, ஜெயா பழனி, மதுக்கூர் ரூமி, பாஸ் என்ற பாஸ்கரன், கீழை ராஸா, காவிரிமைந்தன், சிம்மபாரதி, சந்திரசேகர், துரை மலைவேல், முகவை காளிதாஸ், செய்யது ஹுசைன், தஞ்சாவூரான், ஜெயராமன் ஆனந்தி, ஒகளூர் நிலவன் மற்றும் ஜியாவுதீன் ஆகியோர் கவிபாட கவியரங்கு இனிதே நிறைவுற்றது.
தொடர்ந்து பாதைகளும் பயணங்களும் இதழ் வெளியீட்டில் முதல் மூன்று பிரதிகளை பாலாஜி பார்த்தசாரதி, கோவை அசோக், மற்றும் நீரோடை மலிக்கா ஆகியோர் வெளியிட முறையே ஹாஜா முகைதீன், மதுரை மஹாலிங்கம் மற்றும் நர்கீஸ் ஜியாவுதீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் பாலாஜி பார்த்தசாரதி மற்றும் பஷீர் அஹமது ஆகியோருக்கு அமைப்பின் சார்பில் தலைவர் கோவிந்தராஜன், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கவுரவிக்க, ஆலோசகர் காவிரிமைந்தன் மற்றும் துணைச் செயலாளர் முகவை முகில் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.
முதலில் பேசிய சிவஸ்டார் உணவகத்தின் உரிமையாளரும், அமைப்பின் தலைவருமான கோவிந்தராஜன் தமிழ்த்தேரின் பவனி வளைகுடாவெங்கும் இன்னும் சிறப்பாக நடைபெறவேண்டுமென்றும், அதற்காக தமிழார்வலர்கள் பலரும் தமிழ்த்தேரில் இணைய வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.
தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் பாலாஜி பார்த்தசாரதி, கோவைக்கே உரிய நகைச்சுவையுடன் கூட்டத்தை கலகலப் பூட்டியதுடன், வாழ்வில் வெற்றி பெறுவதற்கான சில வெற்றி வழிமுறைகளை விழாவின் தலைப்பிற்குள் செலுத்தி, உற்சாக உரையாற்றி அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளிச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய பஷீர் அஹமது கவிதை என்பது எந்த இடத்திலிருந்து வரும் என்பதை யாரும் யூகிக்க முடியாது என்று கூறிய அவர், கடந்து வந்த பாதை மற்றும் வரலாற்றை யாரும் மறந்து விடக் கூடாதென்றும், அதே போன்று அழிந்து கொண்டிருக்கும் வரலாறுகளை மீட்டெடுக்கும் பொருட்டு தான் செய்துவரும் ஆராய்ச்சிகளையும் பற்றி பேசியதுடன் ஒரு சிறு கவிதையை வாசித்துக் காட்டி கைதட்டலை அள்ளிக் கொண்டார்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய காவிரிமைந்தன் அமீரமெங்கும் பவனிவரும் தமிழ்த்தேர் தலைவர் கோவிந்த ராஜன் கூறியது போல் வளைகுடாவெங்கும் பவனி வரவேண்டும் என்றவர் அதற்கு முதல் படியாக சிறப்பு விருந்தினர் மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களிடமிருந்து படைப்புகளை தமிழ்த்தேர் இதழுக்கு அனுப்பித் தரவேண்டுமென்ற கோரிக்கையை வைக்க, பஷீர் அவர்களும் மஸ்கட் மற்றும் கத்தார் தமிழ்ச்சங்களிலிருந்து தன்னாலான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத்தின் செயல்பாடுகளை கௌரவிக்கும் வண்ணம் சிறப்பு விருந்தினர் பாலாஜி பார்த்த சாராதி அவர்களால் அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.
இறுதியாக அமைப்பின் பொதுச்செயலாளர் சிம்மபாரதி நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது. காவிரிமைந்தன், தஞ்சாவூரான், ஆனந்தன், ஜியாவுதீன், சிம்மபாரதி, அபுதாபி பழனி மற்றும் கீழை ராஸா ஆகியோர் நிகழ்ச்சி்க்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications