துபாய் தொழிலதிபர் செய்யது எம். ஸலாஹுத்தீனுக்கு யுனெஸ்கோ விருது
துபாய் ஈடிஏ அஸ்கான் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம் ஸலாஹுத்தீன் அவர்களுக்கு யுனெஸ்கோவின் மௌலானா ஜலாலுதீன் ரூமி விருதினை யுனெஸ்கோவின் முன்னாள் இயக்குநரும், மொரீஷியஸ் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமன் வழங்கி கௌரவித்தார்.
இவ்விருது செய்யது எம் ஸலாஹுத்தீனின் மனிதநேயப்பணிகளுக்காகவும், 70,000 க்கும் மேற்பட்டோருக்கு தனது நிறுவனத்தில் வேலை கொடுத்து ஏழ்மையை விரட்ட பாடுபட்டு வருவதற்காகவும் வழங்கப்பட்டது.
மஹாத்மா காந்தி விருது
துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷுக்கு மஹாத்மா காந்தி விருதினை ஆறுமுகம் பரசுராமன் வழங்கி கௌரவித்தார்.
இவ்விருது ஜெயந்தி மாலா சுரேஷின் மனித நேயப் பணிகளுக்காகவும், துபாய் தமிழ்ச் சங்கத்தின் மூலம் கலை, கலாச்சாரச் சேவை செய்வதற்காகவும் வழங்கப்பட்டது.
இவ்விருது துபாய் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவின்போது ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.













Click it and Unblock the Notifications