துபாயில் குடும்ப உறவுகள் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய்: குடும்ப உறவுகளை பேணும் முறை குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி 15.06.2011 (புதன்கிழமையன்று) துபாயில் நடைபெற உள்ளது. அங்குள்ள அஸ்கான் டி பிளாக்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் ஒய்வு பெற்ற தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் மு.அ. முகம்மது உசேன் குடும்ப உறவுகள் குறித்து உரை நிகழ்த்துகிறார்.
துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி புதன் கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெறும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு தனி இடம்
குடும்ப உறவுகளை பேணுவதில் பெண்களுக்கு முக்கிய பங்குண்டு என்பதை கருத்தில் கொண்டு இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் பெண்களுக்காக சிறப்பு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே பெண்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு 050 51 96 433 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications