இன்று வரை சிக்கவில்லை சிறுத்தை - என்னதான் செய்கிறது வனத்துறை?
வால்பாறை: வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை இன்றுவரை கூண்டில் சிக்காததால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
சிறுமி பலி
வால்பாறை அடுத்துள்ளது தாய்முடி எஸ்டேடில் கடந்த மாதம் 18ம் தேதி பெற்றோருடன் ரோட்டில் நடந்து சென்ற மூன்றரை வயது சிறுமி ஜனனியை சிறுத்தை தூக்கிச் சென்று கொன்றது. இச்சம்பவத்தால் வெகுண்டெழுந்த அப்பகுதி பொதுமக்களும், தேயிலை தோட்ட தொழிலாளர்களும் ஒன்று திரண்டு போராட துவங்கினர்.
கூண்டு
இதனையடுத்து, கொலைகாரச் சிறுத்தையினைப் பிடிக்க வனத்துறை முடிவு செய்து மூன்று கூண்டுகளை வைத்தனர். சிறுத்தையை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. கடந்த 16 நாட்களாக இரவு பகலாக வனத்துறையினர் தவம் கிடக்கின்றனர். ஆனாலும், இவர்களுக்கு டிமிக்கி கொடுக்கிறது சிறுத்தை.
பொதுமக்கள் அச்சம்
சிறுத்தை கூண்டில் சிக்காததால் இப்பகுதி தொழிலாளர்கள் தேயிலை பறிக்க செல்ல பயப்படுகின்றனர். இது வரை நான்கு குழந்தைகள் சிறுத்தைக்கு பலியாகியுள்ளனர் என்பதால் விடுமுறை என்றபோதும் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதில்லை.
'தற்போது கடும் மழை பெய்து வருவதால் சிறுத்தையை பிடிக்கும் பணியில் சுணக்கம் உள்ளது; விரைவில் சிறுத்தையைப் பிடித்து விடுகிறோம்" என்கிறார்கள் வனத்துறையினர்.












Click it and Unblock the Notifications