10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஓமனில் லேபர் வேலை!
நெல்லை: ஓமனில் லேபர் வேலைக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் தேவைப்படுவதாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி்யிருப்பதாவது,
ஓமன் நாட்டில் உள்ள ஒரு முன்னனி வார்ப்பட தொழிற்சாலைக்கு தொழிலாளியாக பணிபுரிய 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத லேபராக வேலைபார்த்து அனுபவம் உள்ளவர்கள தேவைப்படுகிறார்கள்.
வயது வரம்பு 22 முதல் 28 வயது வரை. தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நிறைவான சம்பளம், தங்கும் இடம், போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதி இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் சில சலுகைகளும் வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
தகுதி அனுபவம் உள்ளவர்கள் அனைத்து சான்றிதழ் நகல்கள், ஓரினல் பாஸ்போர்ட் மற்றும் 3 புகைப்படத்துடன் வரும் 27ம்தேதி காலை 8 மணிக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-600 020 என்ற முகவரியில் நடக்கும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications