குமரி சங்கமம் 2011-கட்டுமரப் படகு போட்டியைத் தொடங்கி வைத்த கனிமொழி
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேற்று நடந்த கட்டுமரம் செலுத்தும் போட்டியில் நீரோடையைச் சேர்ந்த மீனவர்கள் முதல் பரிசு பெற்றனர்.
குமரி சங்கமம் 2011 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கன்னியாகு்மரியில் கட்டுமரம் செலுத்தும் போட்டி நேற்று காலை கன்னியாகுமரி கடலில் நடந்தது. போட்டியை எம்பி கனிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சுரேஷ்ராஜன், எம்எல்ஏ ராஜன், எம்பி ஹெலன் டேவிட்சன், தமிழ் மைய இயக்குனர் ஜெகத் கஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் மொத்தம் 18 கட்டுமரப் படகுகள் கலந்து கொண்டன.
சுமார் ஒரு கடல் மைல் தொலைவு தூரம் நடந்த இப்போட்டியில் நீரோடையைச் சேர்ந்த நிக்கோலஸ் என்பவரது தலைமையிலான வல்லம் முதல் பரிசையும், குறுப்பனையைச் சேர்ந்த மரியஜான் என்பவரது தலைமையிலான வல்லம் இரண்டாம் பரிசையும், மேலமணக்குடியைச் சேர்ந்த வின்சென்ட் என்பவரது வல்லம் மூன்றாவது பரிசையும் பெற்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு கன்னியாகுமரி பங்கு தந்தை லியோன்கென்சன் தலைமை வகித்தார். முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரமும், கலந்து கொண்ட அனைத்து கட்டு மரத்துக்கு ரூ.1000-ம் வழங்கப்பட்டது. பரிசுகளை தமிழ் மைய இயக்குனர் ஜெகத் கஸ்பர் வழங்கினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications