கிருஸ்துமஸ் பெருவிழா– வேளாங்கண்ணியில் குவியும் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

Velankanni
வேளாங்கண்ணி: கிருஸ்துமஸ் பண்டிகை ஒட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் திரண்டுள்ளதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு திருப்பலி

ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு பேராலயத்தில் திருப்பலியும், காலை 8 மணிக்கு கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு பிராத்தனையில் பங்கேற்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு திரண்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் இரவு நேரத்தில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+