துபாயில் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க துவக்க விழா
துவக்கமாக பஷீர் இறைவசனங்களை ஓதினார். ஜாஹிர் உசேன் தலைமை வகித்தார். ஹாரூண் ரஷீத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஏ. அலாவுதீன் முன்னாள் மாணவர் சங்கத்தை துவக்கி வைத்து கல்லூரித் தலைவர் அல்ஹாஜ் டாக்டர் எஸ்.எம். ஹாமித் அப்துல் காதிர் அவர்களின் வாழ்த்துரையினை வாசித்தார்.
கல்லூரி முதல்வர் அலாவுதீன் அவர்களுக்கு முன்னாள் மாணவர் சங்கத்தினர் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
முஹம்மது சதக் பாலிடெக்னிக் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 400-க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளில் சிறப்பிடத்தில் இருந்து வருகிறது. இதற்கு கல்லூரி நிர்வாகமும், ஆசிரியப் பெருமக்களும், மாணாக்கர்களும், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒட்டுமொத்த ஆதரவு தான் என்றால் மிகையாகாது.
கல்லூரி நிர்வாகக்குழு அமீரகத்தில் முன்னாள் மாணவர் சங்கம் துவக்குவதற்கு அனுமதியளித்தமைக்கும், அஸ்கான் டி பிளாக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்த இடம் வழங்கி உதவிய ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுதீன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முஹம்மது கனி, ஜாஹிர் உசேன், ஹாரூண் ரஷீத், கஸ்ஸாலி, பஷீர் உள்ளிட்ட ஏழு பேர் முன்னாள் மாணவர் சங்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் கலந்துரையாடல் நடைபெற்றது. நன்றியுரை மற்றும் துஆவிற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.
முன்னாள் மாணவர் சங்கம் குறித்த விபரங்கள் அறிய 055 405 9982 / 050 7585458 எனும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்













Click it and Unblock the Notifications