முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் திறப்பு
நீலகிரி: கடந்த வாரங்களில் முதுமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நல்ல மழை பெய்த காரணத்தினால், முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்தது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தை இன்று முதல் மீண்டும் திறந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடம் முதுமலை புலிகள் காப்பகமாகும். இங்கு யானைகள், மான்கள், புலிகள், காட் டெருமைகள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள், பறவைகள் உள்ளது.
தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்குள்ள வன விலங்குகளை காண பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் மழையில்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டது. அங்குள்ள செடி, கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தாதலும், நீர்நிலைகள் வறண்டு போனதாலும் இங்குள்ள வனவிலங்குகள் இடம் பெயர்ந்தன.
மேலும் இந்த பகுதியில் அடிக்கடி காட்டுத்தீயும் ஏற்பட்டது. இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தை கடந்த மாதம் முதல் தேதியில் இருந்து சென்னை தலைமை வனத்துறை அதிகாரி உத்தரவின் பேரில் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது.
தொடர்ந்து கடந்த வாரங்களில் முதுமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நல்ல மழை பெய்த காரணத்தினால், முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்தது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தை இன்று முதல் மீண்டும் திறந்தனர்.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் வரும் 3 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை 6 நாட்கள் அனைத்து வன விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்ற வற்றின் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதால், முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் வரும் 3 ம் தேதி முதல் மூடப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications