அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க.வின் முப்பெரும் விழா
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று தி.மு.க.வின் முப்பெரும் விழா நடக்கிறது.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாயலத்தில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க.வின் சார்பி்ல் முப்பெரும் விழா நடக்க உள்ளது. தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.
பள்ளி மேல்நிலைப் பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவர்களுக்கு தி.மு.க. அறக்கட்டளை சார்பில் நிதியுதவியும் சான்றிதழும், சிறந்த ஆட்டோ டிரைவர்களுக்கு சான்றிதழ், நிதியுதவி, புத்தகம் ஆகியவற்றையும் தி.மு.க. தலைவர் கருணாநிதி வழங்குகிறார்.
கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிப் பெறும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் நிதியுதவியும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
தி.மு.க. முப்பெரும் விழாவின் விருது வழங்கும் நிகழ்ச்சியில், சுப.வீரபாண்டியன் பெரியார் விருதும், தி.மு.க. சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா விருதும், நெல்லை மாநகராட்சி மேயராக பணிபுரிந்த உமா மகேஸ்வரிக்கு பாவேந்தர் விருதும் வழங்கப்படும். கலைஞர் விருதை தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக் குழு செயலாளர் முகமது சகி பெறுகிறார்.
அனைத்து விருதுகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி வழங்கி, விழா சிறப்புரையாற்றுவார். தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச் செயலர்கள் துரைமுருகன், பரிதிஇளம்வழுதி, சற்குணபாண்டியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.


Click it and Unblock the Notifications
