சென்னிமைலையை காக்க போராட்டத்தில் குதிக்கவிருக்கும் நல்லகண்ணு

இது குறித்து சென்னிமலை இயற்கை வளப்பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள மலையை வெட்டி, மண் கடத்தப்படுகிறது. இது கண்டனத்திற்குரிய செயலாகும்.
சென்னிமலையின் இயற்கை வளத்தையும், பாரம்பரிய பெருமையையும் பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும், சமூக நல அமைப்புகளும் இணைந்து சென்னிமலை இயற்கை வளப்பாதுகாப்பு இயக்கம் என்ற கூட்டமைப்பை துவக்கியுள்ளோம்.
இந்த இயக்கம் சார்பில் கடந்த 4-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தினோம். இந்த நிலையில் நாளை (10-ம் தேதி) ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு நடைபெறுகின்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் நல்லக்கண்ணு துவக்கி வைக்கிறார்.
இதில் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி உள்பட பல சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ஏற்னவே தாமிரபரணி ஆற்றை காக்க நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றிபெற்றவர் நல்லகண்ணு. தற்போது அவர் சென்னிமலைக்காக போராட்டத்தில் குதித்துள்ளது அப்பகுதி மக்களிடையே வெற்றிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications