மிச்சிகன் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாட்டம்: அம்பாளுக்கு சிறப்பு ஹோமம்

Subscribe to Oneindia Tamil

மிச்சிகன்: அமெரி்க்காவின் மிச்சிகனில் உள்ள அருள்மிகு பராசக்தி கோவிலில் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ளது அருள்மிகு பராசக்தி கோவில். இந்த கோவிலில் நவராத்திரி விழா கடந்த மாதம் 27-ம் தேதி துவங்கி கடந்த 6-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமரிசையாக நடந்தது. இந்த 10 நாட்களும் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது.

விழாவின் முதல் நாளன்று சாகம்பரி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனுக்கு சண்டி ஹோமம் நடத்தப்பட்டது.

10 நாட்களும் அம்மனுக்கு 10 விதமான அலங்காரம் செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு,

முதல் நாள் - சாகம்பரி அலங்காரம்
இரண்டாவது நாள் - மீனாட்சி அலங்காரம்
மூன்றாவது நாள் - காமாட்சி அலங்காரம்
நான்காவது நாள் - தனலட்சுமி அலங்காரம்
ஐந்தாவது நாள் - அன்னபூரணி அலங்காரம்
ஆறாவது நாள் - கஜலட்சுமி அலங்காரம்
ஏழாவது நாள் - சர்வேஸ்வரி அலங்காரம்
எட்டாவது நாள்(துர்க்காஷ்டமி) - கனக துர்க்கா அலங்காரம்
ஒன்பதாவது நாள்(சரஸ்வதி பூஜை) - சரஸ்வதி அலங்காரம்
பத்தாம் நாள்(விஜயதசமி) - மஹிசாசுரமர்த்தினி அலங்காரம்

நவராத்தியின் 4-ம் நாள் விழா அன்று டாக்டர் ஜி. கிருஷ்ணகுமார் அவர்கள் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். நவராத்திரி விழா கொண்டாடப்பட்ட 10 நாட்களுமே நவஷாரி ஹோமம் நடத்தப்பட்டது. இது தவிர சண்டி ஹோமம், தேவி மகத்மிய பாராயணம், லலிதா திரிசதி அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, மஹா சண்டி ஹோமம், மகா சுதர்சன ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது.

விழா நடந்த அனைத்து நாட்களும் மாலை நேரத்தி்ல கர்நாடக இசை கச்சேரி நடந்தது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+