பிறக்கும்போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை: வேலூர் டிஐஜி சேஷசாய்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: பிறக்கும்போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சூழ்நிலையில் குற்றவாளியாகி சிறைக்கு வருபவர்களை தரம் பிரிக்க கூடாது என்று வேலூர் சரக டி.ஐ.ஜி.சேஷசாய் கருத்து தெரிவி்த்துள்ளார்.

வேலூர் தொரப்பாடியில் தென்னிந்திய சிறை அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் (ஆப்கா) செயல்பட்டு வருகின்றது. இங்கு சிறை நிர்வாகத்தில் மனித உரிமைகள் என்ற தலைப்பில் 3 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.

வேலூர் சரக டி.ஐ.ஜி. சேஷசாய் முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:

கடந்த காலங்களில் போலீசாரை கண்டாலே பலருக்கும் பயம் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. மக்களுக்கு போலீசார் காவலராக உள்ளனர். அப்போது, மனித உரிமை ஆணையங்கள் எதுவும் இல்லை. ஆனால், இப்போது மனித உரிமை ஆணையங்கள் நம்மை கண்காணித்து வருகின்றது.

மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பொது மக்களிடம் அதிகளவில் உள்ளது. எனவே போலீசாரும், சிறை அலுவலர்களும் நேர்மையாக பணியாற்ற வேண்டும். பிறக்கும்போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சூழ்நிலை காரணமாக குற்றவாளியாகி சிறைக்கு வருபவர்களை தரம் பிரித்து பார்க்க கூடாது. இவ்வாறு சேஷசாய் பேசினார்.

இந்த முகாமில், தமிழகத்தை சேர்ந்த 6 உதவி சிறை அலுவலர்கள், கர்நாடகத்தை சேர்ந்த 4 சிறை அலுவலர்கள், டெல்லியை சேர்ந்த 16 உதவி சிறை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமை பிரகடனங்கள், சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+