ஓணம் பண்டிகை-சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி மலையாள மொழி பேசும் மக்கள் கணிசமாக உள்ள சென்னை, கோவை உள்பட 5 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்குப் பதில் வேறு ஒரு நாளில் அரசு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஓணம் பண்டிகை 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் மலையாள மொழி பேசுவோர் அதிகளவில் வசிக்கும் சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு 9ம் தேதி அரசு விடுமுறையாகும்.

இதற்கு பதிலாக, சென்னை மாவட்டத்தில் 10ம் தேதி வேலை நாளாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த மாதம் 8ம் தேதி வேலை நாளாகவும் இருக்கும். பிற மாவட்டங்களில் எந்தெந்த தேதியில் வேலை நாள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+