சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: கோவை கலெக்டர் அறிவிப்பு
கோவை: சிறுபான்மையின மாணவர்கள் பள்ளிப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளுக்கு உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாநாத் அறிவித்துள்ளார்.
கல்வி உதவித்தொகை
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில அரசு ஆண்டுதோறும் உதவித்தொகையினை வழங்கி வருகிறது. சிறுபான்மை மதத்தினராகக் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்ஸியர்கள் மற்றும் புத்த மதத்தினைச் சேர்ந்த மாணவ-மாணவியர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்.
பள்ளிப் படிப்பு
பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் மிகாமல் இருக்கும் மாணவ-மாணவியர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையை புதுப்பித்துக்கொள்ள விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 15. புதியதாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30.
பள்ளி மேற்படிப்பு
பிளஸ் 1, பிளஸ் 2, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் பயிலும் தகுதி வாய்ந்த மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு எழுதிய தேர்வுகளில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். புதியதாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30.
இணையதளம்
மாணவ-மாணவியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பணியை எளிதாக்கும் விதமாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.tnminoritiesscholarship.in எனும் இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications