திருச்செந்தூர் கோயிலில் கூடுதல் வாயில்கட்ட தடை-உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கூடுதலாக 2 நுழைவு வாயில் அமைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மகா மண்டபத்தின் தெற்கு பகுதியில் உள்ள நுழைவு வாயில் வழியாக உள்ளே வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஜெயந்திநாதர் சன்னதிக்கு எதிர்புறமும், மகா மண்டபத்தில் உள்ள நடராஜர் சன்னதிக்கு எதிரேயும் 2 நுழைவு வாயில்கள் அமைக்க இந்து அறநிலையத்துறை ஆணையர் கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காயமொழியைச் சேர்ந்த பாலசுப்பிரமணிய ஆதித்தன் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் தந்திர சமிச்யம் விதப்படி கட்டப்பட்டுள்ளது. கர்ப்ப கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை ஒரே கூரையின் கீழ் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் புதிதாக 2 வாயில்கள் அமைப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது. இதனால் கோயிலின் தெய்வீக தன்மை பாதிக்கப்படும். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பால்வசந்தகுமார், சுப்பையா ஆகியோர் நேற்று அளித்த தீர்ப்பில் கூடுதலாக 2 வாயில்கள் அமைக்க இடைக்கால தடை விதித்தும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி அறநிலையதுறை செயலர், ஆணையர், கோயில் நிர்வாக அதிகாரி, அறங்காவலர் குழு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பும்படியும் உத்தரவிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications