வீடியோ கான்பரன்சிங் மூலம் சுப்பிரமணிய சிவா மணி மண்டபத்தை திறந்த முதல்வர்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியில் கட்டப்பட்டுள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவிற்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என பல்வேறு அமைப்பினரும், சமூக சேவகர்களும், விடுதலைப் போராட்ட தியாகிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று பாப்பிரெட்டி பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மணி மண்டபம் அமைக்க கடந்தாண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக சுமார் ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் கட்டும் பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து அந்த மணி மண்டபத்தை இன்று சென்னையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications