யூஏஈ தமிழ் சங்கம் நடத்தும் உலக அளவிலான நவராத்திரி கொலு போட்டி

ஐக்கிய அரபு அமீரக தமிழ் சங்கம் முதன்முறையாக உலக அளவிலான நவராத்திரி கொலு போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.
போட்டியில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை,
இந்த ஆண்டு நீங்கள் வைத்த கொலுவின் புகைப்படத்தை ஜேபிஜி வடிவில் [ அளவு அகலம் 800 (பிக்சல்ஸ்) x உயரம் 600 (பிக்சல்ஸ்) ] [email protected], [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பு வேண்டும். அதில் புகைப்படம் எடுக்கப்பட்ட நாள், நேரம், நீங்கள் எங்கிருந்து அனுப்புகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.
ஒவ்வொரு போட்டியாளரும் 2 புகைப்படங்கள் அனுப்ப வேண்டும். அதில் ஒரு புகைப்படத்தில் நீங்கள் இருக்க வேண்டும்.
நீங்கள் வைத்த கொலு பற்றி 100 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி அனுப்ப வேண்டும்.
போட்டி ஏற்பாட்டாளர்கள், ஸ்பான்சர்கள் நீங்கள் அனுப்பும் கொலு புகைப்படத்தை பயன்படுத்திக்கொள்ள சம்மதிக்க வேண்டும். அந்த புகைப்படம் http://www.uaetamilsangam.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
இணையதளத்தில் வெளியிடப்படும் புகைப்படங்களுக்கு ஆன்லைன் பார்வையாளர்கள் வாக்களிப்பார்கள். நீங்கள் நிற்கும் புகைப்படத்தை வாக்காளர் பார்க்க முடியாது.
5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே இருந்தால் பரிசும், சான்றிதழும் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் பத்திரிக்கைகள், நாளிதழ்கள் மற்றும் சில தமிழ் சேனல்களில் வெளியிடப்படும். பரிசு பெறுபவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே இருந்தால் அவர்கள் இருக்கும் இடத்தில் உள்ள ஊடகங்களில் பெயர்கள் வெளியிடப்படும்.
இந்த போட்டி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் http://www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.












Click it and Unblock the Notifications