வேளாங்கண்ணி ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
வேளாங்கண்ணி: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
இன்று மாலை 6. 30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கவுள்ளது. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
கடல் அலைகளுக்குப் போட்டியாக மக்கள் தலைகளாக வேளாங்கண்ணி மாறியுள்ளது. பல்வேறு சிறப்புப் பேருந்துகளும் வேளாங்கண்ணிக்கு இயக்கப்படுகிறது.
திருவிழா தொடக்கத்தையொட்டி விரிவான பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெருமளவிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications