4 நாட்களில் உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டும்: ஐ.நா.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதி நிர்வாக இயக்குனர் பாபாதுண்டி ஓசோடைம்ஹின் கூறியதாவது, உலக மக்கள் தொகை இன்னும் 4 நாட்களில் 700 கோடியை எட்ட உள்ளது. தற்போதைய உலக மக்கள் தொகையில், 10-24 வயதுள்ளவர்கள் 180 கோடி பேர் உள்ளனர். உலகின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் அமைய உள்ளதால், அவர்களின் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.
எதிர்கால பொருளாதாரம், சுற்றுசுழல் குறைபாடு ஆகியவற்றில் இப்போதே கவனம் செலுத்த வேண்டும். பல நாடுகளில் இந்த நவீன காலத்திலும் ஆண்-பெண் இனப்பாகுபாடு இருக்க தான் செய்கிறது. இந்த பாகுபாடு மறைந்தால் மட்டுமே பல துறைகளில் வளர்ச்சியை எட்ட முடியும்.
வளரும் நாடுகளில் வளர் இளம் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி, கருத்தடை, எய்ட்ஸ் நோயில் பாதுகாப்பு குறித்த போதிய அறிவு இல்லை. இளைஞர்களின் தேவைகளுக்காக, உலக நாடுகள் அதிக நிதி செலவிட வேண்டும். ஒவ்வொரு நாடும் எதிர்காலத்தை குறித்து திட்டமிட்டு, தகுந்த முறையில் முதலீடு செய்வதன் மூலம், மொத்தமுள்ள 700 கோடி மக்களும் பயன் அடைவார்கள், என்றார்.
உ.பியில் விழா:
மக்கள் தொகை 700 கோடியை எட்டுவதை யொட்டி, உத்தரபிரதேச மாநிலம் லக்னெளவில் வரும் 31ம் தேதி சிறப்பு விழா ஒன்றை 'பிளான்' என்ற சர்வதேச அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications