செம்மொழித் தமிழாய்வு மையத்துக்கு முழுநேர இயக்குநரை நியமிக்க கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
மதுரை: செம்மொழித் தமிழாய்வு மையத்திற்கு தமிழ் துறையைச் சேர்ந்த ஒருவரை முழுநேர இயக்குநராக நியமிக்க வேண்டும் என்று தமிழ் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கி.த.பச்சையப்பன் தலைமையில் கூடிய செயற்குழு இது குறித்து ஆலோசனை நடத்தியது. இதில் செம்மொழித் தமிழாய்வு மையத்திற்கு முழுநேர இயக்குநரை நியமிக்க வேண்டும். அதுவும் தமிழ்த் துறையைச் சேர்ந்த வல்லுநரையே இயக்குநராக நியமிக்க வேண்டும்.
செம்மொழித் தமிழாய்வு மைய நிறுவனம் முழுவீச்சில் செயல்படத் தேவையான எழுத்தாளர்களையும், பிற ஊழியர்களையும், அலுவலர்களையும் மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனே நியமிக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications