புதுவருஷத்தில் உங்க கனவு நனவாகனுமா?
மனிதர்களின் ஆசைகளும் தேவைகளும் அதிகம். எதையாவது வாங்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் ஊறிக்கொண்டேயிருக்கும். அது புத்தாடை, மொபைல்போன், வீடு, கார் என பணம் சம்பாதித்து அவற்றை வாங்கவேண்டும் என்று மனதில் ஆசையை வளர்த்துக்கொண்டிருப்பார்கள்.
தங்களின் லட்சியக்கனவை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகவே சிலர் அயராது உழைப்பார்கள். கனவு நிறைவேற எத்தனையோ விசயங்களைக்கூட தியாகம் செய்பவர்கள் இருக்கின்றனர். எப்படியாவது அதை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள்.
எப்படியாவது வரப்போகிற புத்தாண்டிலாவது நம்முடைய ஆசையை, கனவை நிறைவேற்றிவிடவேண்டும் என்று சிலர் சபதம் எடுத்துக்கொள்வார்கள். மனிதர்களின் மிக முக்கிய தேவையான செக்ஸ் தவிர்த்து அவர்கள் அதிகம் ஆசைப்படும் பத்து விசயங்களை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

புது மாடல் மொபைல்போன்
இன்றைக்கு கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை மொபைல்போன் இல்லாதவர்கள் இருக்க முடியாது. அதுவும் சந்தையில் புத்தம் புதிதாக வரும் ஆப்பிள், ஆண்ட்ராய்ட்ஸ் போன்களை வாங்கி தீரவேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே உண்டு.

அழகு சாதனப் பொருட்கள்
பெண்களோ, ஆண்களோ தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் இப்போது அதீத ஆர்வம் காட்டுகின்றனர். பெர்ப்யூம்ஸ், சரும பாதுகாப்பு அழகு சாதனங்களை வாங்க வேண்டும் என்று ஒரு சாரார் ஆசைப் படுகின்றனர்.

வைர மூக்குத்தி
தங்கம் என்பது நடுத்தர வர்க்கத்தினரின் ஆசையாக இருந்தாலும் டால் அடிக்கும் வைரம் வாங்கவேண்டும் என்பது மனதில் ஆசை இருந்து கொண்டே இருக்கும். வைர நெக்லஸ் வாங்கா விட்டாலும் அட்லீஸ்ட் வைர மோதிரமாவது வாங்கவேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் ஆசை. உங்களின் காதலிக்கோ, மனைவிக்கோ வைரத்தில் வாங்கி பரிசளியுங்களேன். அவரின் புன்னகை வைரத்தை விட அதிகமாய் டாலடிக்கும்.

அழகான வீடு வாங்கவேண்டும்
நான்கு சுவரும் ஒரு சீலிங்கும் கொண்டதுதான் வீடு. ஆனால் சொந்தமாக தனக்கு ஒரு வீடு வாங்கவேண்டும் என்று அனைவருக்கும் கனவு ஆசை இருக்கும். இந்த ஆசைக்கு அளவே இல்லை. தங்களுக்கு ஏற்ற வடிவத்தில் வீடுகளை கட்டி வாழவேண்டும் என்று மனிதர்கள் அதிகம் ஆசைப் படுகின்றனர். இதற்கு வானமே எல்லையாக இருக்கிறது.

அழகான ஆடைகள், நகைகள்
பீரோவில் அழகான புடவைகள், நகைகள் இருந்தாலும் புதிய டிசைனின் வரும் ஆடைகள், நகைகள் வாங்கவேண்டும் என்று ஆசைப்படுவது பெண்களின் இயல்பு. புதிய ஹேண்ட்பேக், செருப்பு, என உடைக்கு மேட்ச் ஆக வாங்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

பேங்க் அக்கவுண்ட்ல பணம்
மாதந்தோறும் வங்கிக் கணக்கில் கூடுதலாக பணம் சேரவேண்டும் என்று ஆசைப்படுவது ஆண், பெண், இருபாலருக்குமே பொதுவான ஆசைதான், பணம் இருந்தால்தானே மற்ற பொருட்களை ஆசைப் பட்டதைப் போல வாங்கமுடியும்.

கார் வாங்கவேண்டும்
சூப்பரா ஒரு கார் வாங்கவேண்டும் என்று ஆண், பெண் இருவருமே ஆசைப் படுவார்கள். விலை அதிகமான ஸ்போர்ட்ஸ் கார் வாங்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கிறதாம்.

ருசியான மதுவகைகள்
நம் ஊர் டாஸ்மாக் சரக்கு குடித்தால் குடல் வெந்து செத்துதான் போவார்கள். காஸ்ட்லியான வெளிநாட்டு மதுவகைகளை ஒரு நாளைக்காவது ருசி பார்க்கவேண்டும் என்பது பெரும்பாலான ஆண்களின் ஆசையாக இருக்கிறது. இதற்காகவே பணத்தை சேர்த்து வைத்து சிறப்பான நாட்களில் வாங்கி ருசிக்கின்றனர்.

விலை உயர்ந்த விடுமுறைக் கொண்டாட்டம்
அழகான பீச் ரிசாட்ஸ்சில் ஹாயாக விடுமுறையை கழிக்கவேண்டும் என்று பலருமே விரும்புகின்றனர். பட்டாம் பூச்சிகளுடன் காலை உணவு, மதிய உணவு கடற்கரை மணலில், இரவு விருந்து விலை உயர்ந்த நட்சத்திர விடுதி என விடுமுறையை கொண்டாடித் தீர்க்கவேண்டும் என்றுதான் பெரும்பாலோனோர் ஆசைப் படுகின்றனர்.

ஐயோ அதிகமா செலவாகுதே!
மேலே சொன்ன விசயங்களுக்கு எல்லாம் பணத்தை தண்ணீராக செலவு செய்ய தயங்காத மக்கள் வாழ்வின் அத்தியாவசிய தேவைகளான கரண்ட் பில், டெலிபோன் பில், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு செலவு செய்ய மனதளவில் சங்கடப்படுவார்கள். இதெல்லாம் ஓசியில கிடைச்சா நல்லா இருக்குமே? அரசாங்கம் செய்யலாமே என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள் இதுதான் மனித இயல்பு.

எது கனவு
வாழ்க்கையில் எதுவுமே எளிதாக கிடைத்து விடுவதில்லை. நம்முடைய லட்சியங்களை, கனவுகளை அடைய அதற்கேற்ப உழைக்க வேண்டும். கனவு காண்பது பற்றி நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. "நாம் தூங்கும் போது காண்பதல்ல கனவு. நம்மை தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு" என்பதுதான் அந்த பொன்மொழி.












Click it and Unblock the Notifications