For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் அழகு தமிழில் வானலை வளர்தமிழின் கவியரங்கம்

By Siva
Google Oneindia Tamil News

Vaanalai Valar Tamil's Kaviarangam held in dubai
துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் "அலைபேசி" மற்றும் "கண்ணாடி" சிற‌ப்பித‌ழ்கள் வெளியீட்டு விழாவும், கவியரங்கமும் 31.08.2012 அன்று காலை 10.30 மணியளவில் துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்தினை கீழை ராஸா பாடிட நிகழ்ச்சி இனிதே துவங்கியது. அனைத்து கவிஞர்களையும் காவிரிமைந்தன் வரவேற்றார். விருதை மு.செய்யது உசேன், குறிஞ்சிதாசன், திண்டுக்கல் ஜமால், ஜெயராமன் ஆனந்தி, சந்திரசேகர், இளையசாகுல், யமுனாலிங்கம், புதுவை ரமணி, எம்.எஸ்.முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று தம் கவிதைகளை வழங்கினர். அலைபேசி இன்றைய வாழ்வில் ஒன்றியிருக்கும் தன்மை குறித்து அவரவர் எடுத்துரைத்த விதமும் இயல்பாய் கலகலப்பாய் கவியரங்கினை மெருகேற்றியது.

அடுத்த மாதத் தலைப்பான 'அறிவு' மற்றும் 'வண்ணங்கள்' ஆகிய தலைப்புகளில் கவிதைகளை 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிய எஸ்.எம்.பாஃரூக் மற்றும் கீழை ராஸா அற்புதமாக தங்கள் கருத்துக்களை வழங்கி மக்களின் கரகோஷங்களைப் பெற்றனர்.

இளைஞர் பல்குரல் கலைஞர் வடிவேல் ஆனந்த் அவர்களின் தனித்திறன் நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. அவருக்கு நினைவுப்பரிசை முத்துப்பேட்டை ஷர்புதீன் வழங்கினார்.

சிறகுகள் இணையதள இதழ் ஒருங்கிணைப்பாளர் திரு.கதிரேசன் அவர்களும், மதுரை மகாலிங்கம் அவர்களும், ஹெல்த் கணேசன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அரிய தகவல்களுடன் நமது வரலாற்றை எடுத்துரைத்து பல்வேறு புதிய தகவல்களைத் தந்த திரு.கதிரேசன் அவர்களது சிறப்புரை நிகழ்ச்சிக்கு புதிய பரிமாணம் தந்தது. சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை ஆதிபழனி, ஜெயராமன் ஆனந்தி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் முதலில் 'அலைபேசி' இதழ் வெளியிடப்பட்டது. அலைபேசி சிறப்பிதழின் முதல் பிரதியை திரு.மகாலிங்கம் வெளியிட ஹுசேன் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை கதிரேசன் வெளியிட வடிவேல் ஆனந்த் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை ஹெல்த் கணேசன் வெளியிட முத்துக்கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

'கண்ணாடி' சிறப்பிதழின் முதல் பிரதியை யமுனாலிங்கம் வெளியிட எஸ்.எம்.பாஃரூக் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை இளையசாகுல் வெளியிட குமார் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை கீழை ராஸா வெளியிட குறிஞ்சிதாசன் பெற்றுக் கொண்டார். இறுதியாக முத்துப்பேட்டை ஷர்புதீன் அவர்கள் நன்றியுரையாற்றினார். அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வ‌ழ‌ங்கினார்.

அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், காவிரிமைந்தன், ஜியாவுதீன், கீழை ராஸா, சிம்மபாரதி, மற்றும் ஆதிபழனி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Vaanalai Valar Tamil organization conducted kaviarangam on august 8 at Karama Sivestar Bhavan restaurant in Dubai. Special magazines titled 'Alaipesi' and 'Kannadi' were released.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X