நாளை துபாயில் புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாய் ஈமான் (இந்தியன் முஸ்லிம் அசோசியேஷன்) அமைப்பு புனித பராஅத் சிறப்பு நிகழ்ச்சியினை 04.07.2012 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்னர் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடத்தவிருக்கிறது என்று அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தெரிவித்துள்ளார்.
மஃரிப் தொழுகைக்குப் பின்னர் மூன்று முறை யாசீன் ஓதி துஆ செய்யப்படும். முதலாம் யாசீன் ஸலாமத்தான நீண்ட ஆயுளுக்காகவும், இரண்டாம் யாசீன் பலாய் முசீபத் கஷ்ட நஷ்டங்கள் நீங்கிடவும், மூன்றாம் யாசீன் ரிஸ்க் விஸ்தீரனம் வேண்டியும் ஓதி துஆ செய்யப்படும்.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு இப்புனித இரவின் நற்பயனை அடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த நிகழ்ச்சி குறி்த்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 055 800 79 09 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications