20ல் துபாயில் இந்திய குடியரசு தினத்தையொட்டி ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் இந்திய கன்சுலேட், இந்திய சமூக நல மையம் மற்றும் பிரெண்ட்ஸ் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து இந்திய குடியரசு தின விழாவினையொட்டி வரும் 20ம் தேதி காலை 8.30 மணிக்கு இந்திய கன்சுலேட் அரங்கில் ரத்ததான முகாமை நடத்துகின்றன.
இந்த முகாமினை இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா துவக்கி வைக்கிறார். இந்தியா கிளப்பின் தலைவர் சித்தார்த் பாலச்சந்திரன் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ரத்ததானம் செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட அலைபேசி மற்றும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
050 15 12 757 / 050 77 84 167 / 055 220 72 63


Click it and Unblock the Notifications
