துபாயில் புருணை காயிதே மில்லத் பேரவைத் தலைவருக்கு வரவேற்பு!
துபாய்: துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் புருணை காயிதே மில்லத் பேரவையின் தலைவரும், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை அறங்காவலருமான அல்ஹாஜ் ஜஃபருல்லாஹ் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 07.11.2012 அன்று மாலை துபாய் ரமதா ஹோட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் அல்ஹாஜ் குத்தாலம் ஏ.லியாகத் அலி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியின் போது மணிச்சுடர் நாளிதழின் வெள்ளிவிழா மலர் வெளியிடப்பட்டது. மலரை குத்தாலம் ஏ.லியாகத் அலி வெளியிட புருணை காயிதே மில்லத் பேரவைத் தலைவர் ஜஃபருல்லாஹ் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் கும்பகோணம் ஏ.முஹம்மது தாஹா,பொருளாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்,அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை அறங்காவலர் வாலான் ஜெய்லான் பாட்ஷா, துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத், அபுதாபி மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் ஆவை ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி, தேரா பகுதி செயலாளர் அய்யம்பேட்டை ராஜாஜி காஸிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரவேற்பின் போது தாய்ச்சபை மற்றும் காயிதே மில்லத் பேரவைகளின் வளர்ச்சிப்பணிகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அங்கீகரிக்கப்பட பேரமைப்பாக வெளிநாடுகளில் காயிதே மில்லத் பேரவைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications