துபாயில் நடனம், நாடகம் என கலைகட்டிய 'முத்தமிழ்ச்சாரல்'
துபாய்: துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் முத்தமிழ்ச்சாரல் நிகழ்ச்சி 16.11.2012 அன்று ஜேம்ஸ் வெலிங்டன் சர்வதேச பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

வரவேற்பு நடனமான கணபதி ஸ்துதியை திருமதி. புவனேஸ்வரி ரத்தினம் வடிவமைத்திருந்தார். குறள் சொல்லும் நேரத்தில் அதியமான் ஒளவை நட்பினை நாடகமாக குழந்தைகள் நடித்துக் காட்டி, விளக்கும்படி நட்பு அதிகாரத்தை அமைத்திருந்தார் திருமதி. ராஜி முரளி. சங்கே முழங்கு நடனம் திருமதி. பத்மப்ரியா பிரகாஷ் வடிவமைப்பில் வீரம் காட்டியது. திருமதி. சுஜாதா விஷ்வநாத், திருமதி. ஸ்ரீரங்கநாச்சியாரின் நீதிக்குத் தலைவன் என்ற மனுநீதிச் சோழன் நாடகம் குழந்தைகளின் நடிப்பில் அனைவரின் பாராட்டையும் பெற்றது. முத்ரா மியூசிக் அன்ட் டான்ஸ் இன்ஸ்டிடியூட் பிரசன்னகுமார் சின்ன குழந்தைகளுக்கு அருமையான நடனத்தை வடிவமைத்திருந்தார்.
சிறப்பு விருந்தினர் திருமதி. டாக்டர். பர்வீன் சுல்தானா 'காலத்தை வெல்லும் பெண்மை' என்னும் தலைப்பில் அரங்கை கலகலக்க வைத்தார். மேலும் தேவகோட்டை ராமநாதனின் காமெடி நிகழ்ச்சி கலகலப்பை ஏற்படுத்தியது. தேவகோட்டை ராமநாதன் மற்றும் திருமதி. சுஜாதா விஸ்வநாத் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினர்.
ஏகல் வித்யாலயா குறித்த குறும்படம் பின்தங்கிய மக்களுக்கான கல்வியின் அவசயம் பற்றி சிந்திக்கத் தூண்டியது. அன்பான அனுசரணையாளர்களின் ஆதரவில் தமிழ், கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு, சேமிப்பு ஆகிய கருத்துக்கள் அடங்கிய ஆரவாரமில்லாத அமைதியான, மறக்கமுடியாத மனதில் நிற்கக்கூடிய நிகழ்ச்சியாக அமைந்தது முத்தமிழ்சாரல்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications