பாரதி பிறந்தநாளைக் கொண்டாடிய துபாய் தமிழ்ச் சங்கம்

விழாவிற்கு துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ.லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் சி. ஜெகநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
குத்துவிளக்கு ஏற்றி துவங்கிய விழாவில் சந்திரா, சீதாலட்சுமி, கவிதா ஆகியோர் இந்திய தேசிய கீதத்தையும், தமிழ்த்தாய் வாழ்த்தினையும் பாடினர். நிதிசாய் மற்றும் கிரிஜா ஆகியோர் திருக்குறள் வாசித்து விளக்கம் வழங்கினர். லோகிதா சுவாமிநாதன் இன்று ஒரு தகவல் வழங்கினார்.
அரேபியன் பிசினஸ் இதழின் சிறப்பு மிகு இந்தியராக தேர்வு செய்யப்பட்ட இந்திய சமூக நலச் சங்க கன்வீனர் கே. குமார் கௌரவிக்கப்பட்டார். தமிழர் ஒருவர் இத்தகைய உயர்நிலையைப் பெற்றமைக்காக துபாய் தமிழ்ச் சங்கம் பெருமிதம் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
ஏற்புரை நிகழ்த்திய கே.குமார் இதுபோன்ற விருதுகளும், கௌரவமும் துபாய் தமிழ்ச் சங்கம் போன்று அனைவரது ஒத்துழைப்பின் காரணமாகவே கிடைத்து வருகிறது என்றார்.
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் ரவிபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாரதியின் பெருமையை பறைசாற்றினார். அவருக்கு துபாய் தமிழ்ச் சங்கம் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் கௌரவித்தது.
உடை அலங்காரம், பாடல் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் பங்கேற்ற குழந்தைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. பொருளாளர் கீதா கிருஷ்ணன் நன்றியுரை நிகழ்த்தினார்.
பெட்டினா ஜேம்ஸ் மற்றும் ஏ. முஹம்மது தாஹா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெகநாதன், ஏ. முஹம்மது தாஹா, கீதா கிருஷ்ணன், சுந்தர், பிரசன்னா, பாலா, விஜயராகவன், விஜயேந்திரன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கு பின்னர் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications