துபாய் தமிழ்ச் சங்கம் நடத்திய குடும்ப சங்கமம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் தமிழ்ச் சங்கம் நடத்திய குடும்ப சங்கமம் நிகழ்ச்சி கடந்த மாதம் 30ம் தேதி காலை முதல் மாலை வரை துபாய் மம்சார் பூங்காவில் பல்வேறு போட்டிகளுடன் உற்சாகமாக நடைபெற்றது.

காலை 8 மணிக்கு துவங்கிய குடும்ப சங்கமத்தின் துவக்கமாக பொருளாளர் கீதா கிருஷ்ணனிடம் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தங்களது வருகையினை பதிவு செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனிப் பிரிவாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

பின்னர் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனிப் பிரிவாக அமைக்கப்பட்டு பாட்டுக்குப் பாட்டு போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

சிறப்பு விருந்தினராக தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் அப்ஸர் பாபு கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். நடிகர் அப்ஸர் பாபுவிற்கு துபாய் தமிழ்ச் சங்க நிறுவனப் புரவலர் ஏ. முஹம்மது தாஹா மற்றும் பொதுச் செயலாளர் ஜெகநாதன் நினைவுப் பரிசினை வழங்கினர்.

போட்டிகளை மீரா கிரிவாசன், சந்திரா, கீதாகிருஷ்ணன், பிரியா உள்ளிட்ட குழுவினர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+