பொள்ளாச்சி டாப்சிலிப்பில் நாளை யானை பொங்கல் திருவிழா
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் நாளை (21.1.2012) யானை பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் கோழிக்கமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு 2 குட்டிகள் உட்பட மொத்தம் 21 யானைகள் உள்ளன. வனத்துறை அதிகாரிகள் யானைகளை வனப் பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். யானைகள் மூலம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் யானை சவாரியும் நடத்தப்பட்டு வருகின்றது.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஆண்டு, டாப்சிலிப்பில் வனத் துறை அதிகாரிகள் மூலம் யானை பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு யானை பொங்கல் விழா நாளை (21.1.2012) அன்று காலை 10 மணிக்கு டாப்சிலிப்பில் நடைபெற உள்ளது.
யானைப் பொங்கலை யொட்டி அலங்கரிக்கப்பட்ட யானைகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு பொங்கல், கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் யானைகளுக்கு வழங்கப்படும். யானைப் பொங்கல் திருவிழாவை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிப்பதோடு, அதில் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகின்றது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications