துபாய் தமிழ் சங்கம் சார்பாக காந்தி ஜெயந்தி மற்றும் பாரதியார் விழா

துபாய் தமிழ் சங்கம் சார்பாக காந்தி ஜெயந்தி மற்றும் பாரதியார் விழா கடந்த 5ம் தேதி மாலை கிரீக் பார்க் சிறுவர் நகர அரங்கில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு துபாய் தமிழ் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். அம்ருதா கிரிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
துவக்க நிகழ்ச்சியாக அமீரக தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இன்று ஒரு தகவலை காவ்யா பாபுவும், திருக்குறளையும் அதன் விளக்கத்தையும் சுகன் ராஜ்குமார் மற்றும் தீபக் ஆகியோர் வழங்கினர்.
காந்தி, நேரு, பாரதியார், இந்திரா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வேடத்தில் சிறுவர் மற்றும் சிறுமியர் தோன்றி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
பாரதியார் பாடல்களான ஓடி விளையாடு பாப்பா, சின்னஞ்சிறு கிளியே, மகான் காந்தி மகான், காக்கைச் சிறகினிலே ஆகிய பாடல்களை குழந்தைகள் பாடினர். ஷிரேஷ் கீபோர்டு வாசித்தார். வினாடி வினா, நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஜனனி கோபாலகிருஷ்ணன், ஸ்ருதி, ஜனனி சுரேஷ், அம்ருதா கிரிவாசன் உள்ளிட்ட சிறுவர், சிறுமியரால் தொகுத்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை முஹம்மது தாஹா, கீதா கிருஷ்ணன், ஜெகநாதன், சுந்தர், பாலா, பிரசன்னா, விஜயேந்திரன், விஜயராகவன் ஆகிய தமிழ் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
அமீரகத்தில் பல்வேறு அமைப்புகள் இருந்தாலும் காந்தி ஜெயந்தி மற்றும் பாரதியார் விழாவை ஆண்டுதோறும் துபாய் தமிழ் சங்கம் மட்டுமே தவறாமல் நினைவு கூர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications