அன்னையர் தினத்தன்றாவது அம்மாவைக் கொண்டாடுவோமே!

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்கிற நன்னெறியில் அன்னையே முன்னிலைப்படுத்தப்படுகிறார். அன்னை என்பவர்தான் ஒரு உயிரைத் தாங்கி வெளிப்படுத்தக் கூடிய ஆதார சுருதி.
உலகின் ஆதி சமூக அமைப்புகள் அனைத்துமே தாய்வழிச் சமூகமாகவே இருந்து வந்தன. தாய்வழித் தெய்வ வழிபாட்டு முறை இன்றும் கூட உயிர்ப்போடுதான் இருக்கிறது. தமிழகத்தில் வழிபடப்படும் அனைத்து பெண் தெய்வங்களுமே ஒரு காலத்தில் மனிதர்களாக வாழ்ந்தவர்களே. அவர்களே இன்று தெய்வங்களாக வழிபடப்படுகின்றனர்.
அண்மைக்காலமாக அதிகரித்துள்ள அன்னையர் தின கொண்டாட்டம் என்பது முதன் முதலாக அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் 1908-ல் கொண்டாடப்பட்டது. இன்று உலகம் முழுவதும் 70 நாடுகள் அன்னையர் தினத்தைக் கொண்டாடி வருகின்றன.
நவீனத்தின் அனைத்தும் உள்ளங்கைக்குள் வந்துவிட்டாலும் நமது கிராமங்களிலும் வாழ்வியலும் தாய்வழிப்பட்ட உறவுகளே ஒவ்வொரு தருணத்திலும் தாங்கி நிற்கக் கூடிய கிளைகளாக நிற்கின்றன.
ஒரு மனிதனின் வாழ்க்கையை பிறப்பிலிருந்தே தீர்மானிக்கின்ற தாயை தெய்வமாகப் போற்றுகிற சமூகமாக நமது கட்டமைப்புகள் இருந்தாலும் இதே சமூக அமைப்புதான் இன்றைக்கு முதியோர் இல்லங்களை வீதிதோறும் திறக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறது.
பள்ளிக்கூடங்களில் ஆசிரியராக இருந்தாலும் பணியிடங்களில் உரிமையாளர்களாக இருந்தாலும் உரிமை கொண்ட நிறுவனங்களில் உயர்பொறுப்பில் இருந்தாலும் எவருமே தாயைப் போல் நேசிக்க வேண்டும் என்ற கருத்தையே முன்வைப்பது இயல்பான வார்த்தைகளில் ஒன்று.
தாய்மை இல்லாத உலகம் வெறுமை கொண்டது. தாய்மையை நேசிப்பதை நிராகரிப்பதை ஈவிரக்கம் எனலாம்.
காலமெல்லாம் நமக்காகவே தேய்ந்து வாழும் தாயைக் கொண்டாட ஒரு நாள் போதாது.. அடையாளக் குறியாடாகவாவது அன்னையர் தினத்தன்றாவது நமது தாயை வணங்கி மகிழ வைக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதெல்லாம் செய்யல்லாம்... அதுவே தாய்க்குப் பெருமை....
இத்தகைய நாளான இன்று உலகம் ஒவ்வொருவிதமான கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வருகிறது .தாய்மையைப் போற்றும் நிகழ்ச்சிகள், போட்டிகள், பரிசுகளை வழங்குதல் என ஒவ்வொருவரும் ஒரு விதமாக கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications