துபாயில் நடந்த உலக நகைச்சுவையாளர் சங்க முதலாம் ஆண்டு விழா
துபாய்: உலக நகைச்சுவையாளர் சங்க துபாய் கிளையின் முதலாம் ஆண்டு விழா 15.11.2012 அன்று மாலை துபாய் அல்தவார் ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அசத்தப் போவது யாரு புகழ் தேவகோட்டை ராமநாதன் தலைமையில் குடும்பத்தில் கணவன் அப்பாடக்கரா? வெறும் டம்மி பீஸா? எனும் தலைப்பில் சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற்றது. அப்பாடக்கர் எனும் அணியில் மர்யம் கபீர், பார்வதி கண்ணன், முஹைதீன் பிச்சை ஆகியோரும், வெறும் டம்மி பீஸ் எனும் அணியில் கங்கா ரமேஷ், பாவை நியாஸ், காமேஷ்வரன் ஆகியோரும் பங்கேற்றனர். இரண்டு மணிநேரத்துக்கும் மேல் பட்டிமன்றம் கலகலப்பான நகைச்சுவையால் அரங்கமே அதிரும் வண்ணம் நடைபெற்றது. இறுதியாக குடும்பத்தில் கணவன் அப்பாடக்கரே என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
பார்வையாளர்களை தனது நகைச்சுவைப் பேச்சால் கட்டிப்போட்ட தேவகோட்டை ராமநானுக்கு உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் சார்பில் நகைச்சுவை பேரரசு எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நகைச்சுவைப் பேச்சரங்கில் சென்னை பஷீர் அஹமது சயீத் பெண்கள் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை முனைவர் பர்வீன் சுல்தானா, பேராசிரியர் சரோன் செந்தில் குமார் ஆகியோர் உரை நிகழ்த்தினர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
லெகசி எனும் குழந்தைகள் அமைப்பின் உறுப்பினர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியது அனைவரையும் கவர்ந்தது. சங்க உறுப்பினர்கள் பாவை நியாஸ், இளையராஜா, முத்துக்கோதை, தண்ணீர்மலை உள்ளிட்டோர் நகைச்சுவைத் துணுக்குகளை வழங்கினர். சௌம்யாவின் பாடல் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
நிகழ்விச்சிக்கான ஏற்பாடுகளை கே.ஜி.குணா தலைமையில் முஹைதீன் பிச்சை, கமலக்கண்ணன், சுல்தான், அன்சாரி, அனீஸ், யூசுஃப், ராமபத்திரன், காமேஷ்வரன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications