துபாயில் நடந்த நகைச்சுவைத் திருவிழா

இந்த நிகழ்ச்சிக்கு உலக நகைச்சுவையாளர் சங்கத் தலைவர் எம். முகைதீன் பிச்சை தலைமை தாங்கினார். முஹம்மது இத்ரீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இலங்கை அரசின் இலக்கியத்திற்கான உயரிய விருது பெற்ற காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு சங்க தலைவர் எம். முகைதீன் பிச்சை மற்றும் அமீரக செய்தியாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
அதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய காவியத் திலகம் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் தனது உரையில், அமீரகத்தில் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இது தான் முதல் தடவை என்றார். அமீரகத்தில் கணவன்மார்கள் அதிகமான நேரம் பணியின் காரணமாக வெளியில் சென்று வந்தாலும் வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்கும் இல்லத்தரசிகளுக்கும், குழந்தைகளுக்கும் இந்நிகழ்ச்சி ஒரு புத்துணர்வை அளிக்கும் என்பதில் ஐயமில்லை எனக் குறிப்பிட்டு உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் துபாய் கிளையின் பணிகள் சிறப்புற நடைபெற வாழ்த்து தெரிவித்தார்.
துபாய் கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளியின் முதல்வர் கலீஃபுல்லாஹ் அவர்கள் தனது வாழ்த்துரையில், நகைச்சுவையின் முக்கியத்துவத்தைப் பற்றியும், குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு பேச்சாற்றலின் அவசியத்தைப் பற்றியும் வலியுறுத்திப் பேசினார். மேலும் தனது நகைச்சுவை உணர்வையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது நகைச்சுவை நாடகம் அரங்கேறியது. சௌம்யலட்சுமி பாடல் பாடினார். பலர் தங்களது நகைச்சுவைகளை பகிர்ந்து கொண்டனர். மாணவ, மாணவியர் அதிக அளவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கத்தின் செயலாளர் எம். கமலக்கண்ணன் நன்றி கூறினார். நகைச்சுவை நிகழ்ச்சிகளை சங்கத்தின் தலைமைப் புரவலர் கே. ஜி. குணா அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications