துபாயில் இம்தாதுல் முஸ்லிமின் சஙக செயற்குழு கூட்டம்
செயற்குழு கூட்டத்திற்கு இம்தாதுல் முஸ்லிமின் சங்க தலைவர் குலாம் முஹம்மது தலைமை தாங்கினார். செயலாளர் முஹம்மது ரஃபிக் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர்கள் பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் குறித்த அறிமுகவுரையினை ஆலோசனைக் கமிட்டி தலைவர் எமிரேட்ஸ் அப்துல் லத்தீஃப் வழங்கினார்.
சென்னை சீதக்காதி அறக்கட்டளை விருது பெற்ற கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது தனது உரையில் சமூக மேம்பாட்டுப் பணியாற்றி வரும் இம்தாதுல் முஸ்லிமின் சங்கத்தின் நிர்வாகிகளைப் பாராட்டினார். மேலும் அவர்களின் நற்பணிகள் தொடர வாழ்த்தினார்.
ஈமான் அமைப்பின் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்கள் அனைவரும் இந்திய தூதரகத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மௌலவி சிராஜுத்தீன் துஆவிற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் சிறுசேமிப்புக்குழு தலைவர் ரஹ்மத்துல்லா, அமீரகத்தின் ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













Click it and Unblock the Notifications