துபாய்: சிங்கப்பூர் ஜமால் முஹம்மது கல்லூரி நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு

சிங்கப்பூர் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முஹைதீன் அப்துல் காதர் மற்றும் பொருளாளர் திட்டச்சேரி ஹிதாயத்துல்லா ஆகியோர் துபாய் வருகை தந்துள்ளனர்.
இவர்களுக்கான வரவேற்பளிக்கும் நிகழ்வுக்கு ஈடிஏ அஸ்கான் குழும துணைப் பொதுமேலாளர் ஹமீது கான் தலைமை வகித்தார். ஈடிஏ ஸ்டார் கல்விக்குழும இயக்குநர் முனைவர் சையத் எம் கலந்தர் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்தீக் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஏற்புரை நிகழ்த்திய சிங்கப்பூர் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முஹைதீன் அப்துல் காதர், சிங்கப்பூரில் முன்னாள் மாணவர் சங்கம் தொடங்குவதற்கு ஒரு முன்னுதாரணம் அமீரகக் சங்கம் தான். இறையருளால் சிங்கப்பூர் அரசின் அனுமதியுடன் கல்லூரி நிர்வாகத்தினரின் ஒத்துழைப்பு காரணமாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அமீரகச் சங்கத்தினர் ஆதரவு தர வேண்டும் என்றார்.
துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில் அப்துல் ரசாக், முதுவை ஹிதாயத், முஹம்மது இசாக், ஹமீதுர் ரஹ்மான், ஹாஜா, அன்சாரி, ஃபலீல், ரஹ்மத்துல்லா, ஜாஹிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications