குவைத்தில் காயிதே மில்லத் பேரவை பொதுக்குழு கூட்டம்
நிகழ்ச்சியின் துவக்கமாக பி. முட்லூர் எஸ்.ஏ. ஷேக் அப்துல் காதர் இறை வசனங்களை ஓதினார். முஹம்மது பந்தர் ஆர். முஹம்மது ஃபாரூக் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், முஸ்லிம் லீக் ஆற்றி வரும் பணிகள் குறித்து விவரித்தார்.
கௌரவத் தலைவர் திருப்பத்தூர் டாக்டர் அன்வர் பாட்சா, துணைப் பொதுச் செயலாளர் சென்னை எம். ஷாஹின்சா, பொருளாளர் காரைக்கால் எஸ்.எம். ஆரிஃப் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் வடக்கு மாங்குடி ஏ. அப்துல் முத்தலீஃப் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தகவல் தொடர்பு செயலாளர் அய்யம்பேட்டை கம்பளி பஷீர், டாக்டர் அன்வர் பாட்சா, குவைத் தமிழ்நாடு கலாச்சார பேரவையின் தலைவர் ஆவூர் பஷீர் அஹமது, ஆலோசகர் அய்யம்பேட்டை கோம்பை சுலைமான், குவைத் அல் ஈமான் நற்பணிமன்ற தலைவர் அய்யம்பேட்டை மரைக்காயர், மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா செயலாளர் அய்யம்பேட்டை முனீர் அஹமது, மார்க்க பிரிவு செயலாளர்கள் புதுச்சேரி மௌலவி முஹம்மது அலி ரஷாதி, வல்லம் மௌலவி சாதிக் நாசர் ரப்பானி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
உறுப்பினர் சேர்ப்புப் பணி, தாய்ச்சபை தலைவர்களை அழைத்து குவைத்தில் இயக்க மாநாடு நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் குவைத் காயிதே மில்லத் பேரவையின் செய்தி மடல் வெளியிடப்பட்டது. பாடகர் லால்குடி கலீபுல்லாஹ் தாய்ச்சபையின் கொள்கை விளக்கப் பாடல்களைப் பாடினார்.
துணைச் செயலாளர் கோட்டக்குப்பம் ஹபீப் ரஹ்மான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













Click it and Unblock the Notifications