கரூரில் அருள்மிகு மாரியம்மனுக்காக அலகு குத்தி அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்!
கரூர்: கரூர் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் அழகு குத்தி அக்னி சட்டி எடுக்கும் திருவிழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
கரூரில் ஜவஹர் பஜாரில் அருள்மிரு மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவிலில் இதுவும் ஒன்று.

ஒவ்வொரு வருடமும், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் அழகு குத்தி அக்னி சட்டி எடுக்கும் திருவிழா மிகப் பிரமாண்டமாக நடைபெறும்.
இதைத் தொடர்ந்து, அமராவதி நதிக்கரையில் இருந்து, பக்தர்கள் பால்குடம், தீர்த்தகுடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்திக் கொண்டும் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
இன்று, நாளை, நாளை மறு நாள் என மூன்று நாட்கள் வெகு சிறப்பாக இவ்விழா நடைபெறும்.
இதில் இன்றும் நாளையும் பக்தர்கள் பால்குடம், தீர்த்தகுடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தி அக்னிசட்டி எடுத்து வருவர். நாளை மறுநாள் (மே30) ந் தேதி கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா நடைபெறும்.
இந்த திருவிழாவிற்கு திருச்சி, மதுரை, சேலம், சென்னை போன் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்களும், பொது மக்களும் திரண்டுள்ளனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மாரியம்மனை காணும் வகையில் தரிசனம் செய்ய சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பகல் நேரத்தில் வெயில் அதிகம் இருக்கும் என்பதால் வழி நெடுக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று பொது மக்களின் தேவை அறிந்து செய்த கோவில் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமாருக்கு கரூர் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதே போல, சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை பொது மக்கள் கலந்து கொள்ளும் திருவிழா என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு தேவை என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications