துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் இல‌க்கிய‌ அமைப்பின் சிற‌ப்பித‌ழ்க‌ள் வெளியீடு ம‌ற்றும் க‌விய‌ர‌ங்க‌ம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 'அறிவு' மற்றும் 'வண்ணங்கள்' சிற‌ப்பித‌ழ்கள் வெளியீட்டு விழாவும், கவியரங்கமும் 21.09.2012 அன்று காலை 10.30 மணியளவில் துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்தினை செல்வி ஆனிஷா பாடிட நிகழ்ச்சி இனிதே துவங்கியது. அமீரகத்திற்கு பன்னாட்டு இஸ்லாமியக் கழகம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் பங்கேற்க வந்திருந்த சிறப்பு விருந்தினர் வாணியம்பாடி பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் - நண்பர்கள் குத்தலாம் அஷ்ரப், எஸ்.எம்.பாரூக் மற்றும் ஹனீபா ஆகியோரின் உதவியால் வானலை வளர்தமிழ் அரங்கிற்கு வருகைதந்து இன்ப அதிர்ச்சி தந்தார். தன் இனிய தமிழால்.. வானலைக்கு வாழ்த்துரைக்கும்போது விலைவாசி போல் வாழ்க என்று வாழ்த்தலாம் என்றால் அதிலும் ஏற்றம் இறக்கம் உண்டு. உலகில் வளர்ச்சி மட்டுமே கொண்டது வயது மட்டும்தான். எனவே வயது போல் வானலை வளர்தமிழ் வாழ்க என்று வாழ்த்தினார். பேராசிரியரை தமிழ்த்தேர் ஆசிரியர் காவிரிமைந்தன் அமைப்பின் சார்பில் வரவேற்றார். பொதுச் செயலாளர் சிம்மபாரதி பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

தமிழ்த்தேர் நிகழ்ச்சியில் முத்தாய்ப்பான கவியரங்கில் அனைத்து கவிஞர்களையும் புதுமையான முறையில் விதவிதமான கதைகள் சொல்லி, கருத்தை அள்ளி கவியரங்கத்திற்கு தலைமை தாங்கிய திண்டுக்கல் ஜமால் வரவேற்றார். விருதை மு.செய்யது உசேன், ஜெயராமன் ஆனந்தி, சந்திரசேகர், இளையசாகுல், யமுனாலிங்கம், முத்துப்பேட்டை ஷரிபுதீன், காவிரிமைந்தன், ஜியாவுதீன், கீழைராஸா, நர்கீஸ்பானு, முகவை முகில் ஆகியோர் பங்கேற்று தம் கவிதைகளை வழங்கினர்.

த‌‌மிழ்த்தேரின் 68வது மாத இதழான 'அறிவு' சிறப்பிதழை பேராசிரியர் அப்துல் காதர் வெளியிட்டார்.

இந்த மாதத்தின் சிறப்பு விருந்தினராய் பங்கேற்ற உலக நகைச்சுவையாளர் மன்றம், துபாய் பிரிவின் தலைவர் திரு.முஹைதீன் பிச்சை அவர்கள் நகைச்சுவை உணர்வின் அலைகளை அரங்கத்தில் பரப்பி, அறிவைப் பற்றியும் வண்ணங்களைப் பற்றியும் அடுக்கடுக்காய் எண்ணப் பதிவுகளை வழங்கினார். தாங்கள் நடத்துகின்ற நகைச்சுவையாளர் கூட்டத்தில் வானலை வளர்தமிழ் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சிறப்பு விருந்தினரைப் பற்றிய இனியதொரு அறிமுகத்தை திரு.முகமது இத்ரிஸ் தந்தார்.

அடுத்து தமிழ்த்தேரின் 69வது இதழான 'வண்ணங்கள்' இதழ் வெளியிடப்பட்டது.

வண்ணங்கள் சிறப்பிதழின் முதல் பிரதியை திரு.முஹைதீன் பிச்சை வெளியிட நர்கீஸ் பானு பெற்றுக் கொண்டார். இரண்டாம் இதழை காஷ்மீர் இலக்கிய ஆய்வாளர் டாக்டர் ஓவிஸ் வெளியிட முஸ்தபா பெற்றுக் கொண்டார். மூன்றாம் இதழை ஹெல்த் கணேசன் வெளியிட இளங்குமரன் பெற்றுக் கொண்டார்.

சிறப்பு விருந்தினர் முஹைதீன் பிச்சை அவர்களுக்கு நினைவுப்பரிசை நர்கீஸ் பானு வழங்கிட, மாத இதழ்களை அழகாய் வடிவம் பெறச்செய்து அரிய பணியை நிறைவேற்றித்தரும் ஜியாவுதீன் அவர்களுக்கு நினைவுப்பரிசை அனீஸ் அவர்களும், கவியரங்கத் தலைமையேற்ற திண்டுக்கல் ஜமால் அவர்களுக்கு நினைவுப்பரிசை முத்தலிப் இக்பால் அவர்களும் வழங்கினார்கள்.

வானலை வளர்தமிழ் பற்றிய ஊடகச்செய்திகளை ஒருங்கிணைத்து அதன் பிரதியை அமைப்பாளர்களுக்கு வழங்கி அறிமுகமானார் முஸ்தபா அவர்கள். அவர் தந்த செய்திகளின் தொகுப்பை உமர் அவர்கள் வெளியிட அமீரக செய்தியாள‌ர் முதுவை ஹிதாய‌த் பெற்றுக் கொண்டார்.

அடுத்த மாதத் தலைப்பான 'நம்பிக்கை' மற்றும் 'மை' ஆகிய தலைப்புகளில் கவிதைகளை 30.09.2012க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் திருமதி.நர்கீஸ் பானு வரவேற்றார். ஜெயராமன் ஆனந்தி நிகழ்ச்சியை தொகுத்து வ‌ழ‌ங்கினார். நிகழ்ச்சியில் அமைப்பின் பொருளாளர் ஆதிபழனி நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், காவிரிமைந்தன், ஜியாவுதீன், கீழைராஸா, சிம்மபாரதி மற்றும் ஆதிபழனி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+