துபாயில் கூத்தாநல்லூர் ஜமாஅத் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil

கேஇஓ-வின் தலைவர் ஜனாப் ஹாஜி கழனி அஹமது மைதீன் அவர்கள் முன்னிலையில் ஜனாப் பி.எம்.ஏ. ஹாஜி முஹம்மது சிராஜுதீன் அவர்கள் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 2010- 2011ம் ஆண்டறிக்கை சமர்பிக்கப்பட்டது.
ஊரின் வளர்ச்சி மற்றும் ஆக்கப்பணிகள் குறித்து உறுப்பினர்கள் தங்களது மேலான ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவித்தனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக ஜனாப் பி.ஏ. ரஃபீக் முஹம்மது, செயலாளராக ஜனாப் அல்வாணி அக்பர் அலி மற்றும் பொருளாளராக ஜனாப் எஸ்.எம்.ஹெச். பாவா முஹையதீன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இரவு உணவிற்கு பிறகு கூட்டம் இனிதே நிறைவுற்றது.












Click it and Unblock the Notifications